கிளிநொச்சியில் பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் நேற்று இரவு 10 மணியளவில் நடந்த விபத்தில், ஒரு குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரந்தன் காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை நடந்து சென்றபோது, அதே திசையில் வந்த தனியார் பேருந்து மோதிக்கொண்டது. இதில், குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.