Welcome to Jettamil

இந்திய திரையுலக பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது

Share

இந்திய திரையுலக பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடலம் நேற்று  தகனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா உட்பட உலகவாழ் தமிழ் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, இந்திய திரையுலக பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் தமது 78ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், உள்ள தமது வீட்டில் வைத்து, தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்தார்.

வாணி ஜெயராம், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

வேலூரைச் சேர்ந்த இசைக் குடும்பத்தில், 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி பிறந்த அவர், 1974 ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற திரைபடத்தின் மூலம் திரையுலகிற்கு பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்

வாணி ஜெயராம் சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும், பல்வேறு மாநில அரச விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவருக்கு அண்மையில், பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது.

வாணி ஜெயராமின் இறுதி சடங்கில் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள், இரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

அவரது உடலம், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து பேரணியாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் அங்கு வேட்டுகள் தீர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடலம் தகனம் செய்யப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை