Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – மாநகர சபை பவுசரில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி

Share

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – மாநகர சபை பவுசரில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி

யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளனர்.

அப்போது, அவர்களுக்கு பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்றபோது, நிலைதடுமாறிய தாயும் மகளும் வீதியின் நடுவே விழுந்துள்ளனர்.

அதேவேளை, எதிர் திசையில் வந்த யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான கலி பவுசர் விழுந்திருந்த தாயின் தலைப்பகுதியின் மேல் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை