நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது
நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் நான்காம் மாடியில் தீ பரவியதாக பொலீசார் தெரிவித்தனர். தீயில் சிக்கி இருந்த ஏழு பேர் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்கள அதிகாரிகளினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களத்தின் ஐந்து தீயணைப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
ராணுவத்தினர் பொலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ஸ்ரேஷ்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலீஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அரச ரசாயன பகுப்பாய்வாளரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.





