Welcome to Jettamil

இலங்கையை உலுக்கிய ஐந்து படுகொலைகள் – சந்தேக நபர் வெளியிட்ட தகவல்

Share

இலங்கையை உலுக்கிய ஐந்து படுகொலைகள் – சந்தேக நபர் வெளியிட்ட தகவல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் ஐந்து பேர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டுபாயில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிடப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் பயணித்த பல வீதிகளில் உள்ள சிசிடிவி காணொளி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளதுடன் பல தகவல்களையும் திரட்டியுள்ளனர்.

54 வயதான சமன் குமார என்ற பிரதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் காலி வித்யாலோக பிரிவெனாவிற்கு முன்பாக உள்ள வாகனத் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இதேவேளை, குறித்த 5 பேரையும் கொலை செய்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை