Welcome to Jettamil

2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

Share

2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது.

அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார்.

அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று சப்ரி தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை