மக்கள் எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரபக்ஷ நேற்று (02) இரவு இலங்கை திரும்பினார். அவருடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் வந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியை வரவேற்க அமைச்சர்கள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன், விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதி ஒரு மாதம் 20 நாட்கள் தங்கியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கொழும்பில் உள்ள வீடொன்றில் கோட்டாபய ராஜபக்ச தங்கவுள்ளதாக பிரபல செய்தி ஊடகம் ஒன்று நேற்று தெரிவித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரபல செய்தி ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மாலத்தீவு நாட்டில் நிலவி வரும் போராட்டச் சூழல் காரணமாக கடந்த ஜூலை 13ஆம் தேதி சென்ற முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச, சில நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி தாய்லாந்தின் பேங்காக் திரும்பினார்.