நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக ராஜ்யசபா உறுப்பினரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
15வது ஐ.பி.எல்., தொடரின் இறுதி ஆட்டத்தில், ராஜஸ்தானை வீழ்த்தி, ஐ.பி.எல்.லில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணி, கிண்ணத்தை வென்றது.
இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கருத்து வெளியிடுகையில், ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளது.
அமித்ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் சபையை ஆட்டுவிக்கும் சர்வாதிகாரியாக உள்ளதால், மத்திய அரசு விசாரணை செய்யாது.
இவ்விவகாரத்தை தெளிவுபடுத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.” என்றும் தெரிவித்துள்ளார்.