Welcome to Jettamil

மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சர்

Share

2023 ஆண்டளவில் பாடசாலை சீருடைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற மாணவர்களுக்கான சலுகைகள் முறையாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டளவில், அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதோடு பிரான்ஸ் அரசாங்கத்துடனும் தொடர்புடைய கட்சிகளுடனும் இது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி பேணுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர், நிலையான கல்வித் திட்டத்தைத் தொடர அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 4718 அதிபர் நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.

ஆசிரியர் கல்வி சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் நிரப்புவதன் மூலம் ஆசிரியர் ஆலோசகர் சேவையில் உள்ள முரண்பாடுகள் களைந்து அந்த சேவை தொடர்பான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கட்டமைப்பு மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை