எதிர்வரும் ஓராண்டு காலத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மண் உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், இயற்கை உரங்களை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேருக்கு 20000 ரூபா மானியமாக அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்தார்.