எரிபொருள் விலையில் இன்று (01) திருத்தம் இடம்பெறாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுடன் ஒப்பிடும் போது, எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் பதினைந்தாம் தேதிகளில் விலை சூத்திரத்தின் மூலம் மாறுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.