எரிபொருள் விலைகள் இன்று மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக சந்தை நிலவரங்களுக்கு அமைய, எரிபொருள் விலைச் சூத்திர முறையின் கீழ் ஜூன் 24ஆம் திகதி, எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கமைய இன்று மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது, அனைத்து வகையான எரிபொருள்களும் குறைந்தபட்சம் 60 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 74 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலைய 56 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 65 ரூபாவினாலும், அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 210 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.