தற்சமயம் 03 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
களனி திஸ்ஸமின் நிலையத்திற்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கியதை தொடர்ந்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம்.
இ.மி.சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி துறை அமைச்சரால் குறிப்பிட முடியாது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றின் தனியுரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.