திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதாவது உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் நேற்றையதினம் (16) திருமண நிகழ்வின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணமடைந்தவர், லுனுகம்வெஹெர – படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.