Welcome to Jettamil

எரிபொருள் விநியோகம்  2 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

Share

இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கும், தனியாருக்கான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று  நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை – சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதென, அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“இன்று முதல் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை, போக்குவரத்து சபை சாலைகளிலும், முப்படைகளினதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை மாதம் 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும்.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும்.

ஜூலை 10ஆம் திகதி வரை நாட்டுக்குள் எரிபொருட்கள் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியம் இல்லாத நிலையில், அதுவரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது கையிருப்பில் உள்ள அனைத்து வகையான எரிபொருட்களையும் அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை