தற்போதைய நிலைமை முடக்க நிலை அல்ல எனவும் மாகாணங்களுக்குள் பொது மக்களின் நடமாட்டங்களை இயன்றளவு கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய நெருக்கடியான நிலைமையை, எதிர்வரும் மாதம் 10ஆம் திகதிக்குள் கட்டம் கட்டமாக சீரான நிலைக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
தற்போது நிதி நெருக்கடியை தீர்க்க மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் ஊடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியை அதற்காகப் பயன்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.