க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் இன்று முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை உயர் தரப் பரீட்சை நடைபெறுகின்றது.
இன்று ஆரம்பமாகியுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதாகவும் இந்த பரீட்சார்த்திகளில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.








