Welcome to Jettamil

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ பெற்ற யாழ். மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Share

யாழ்ப்பாணம், பாசையூரை சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (19) என்ற மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சகோதரியின் ஆடையொன்றை உயிரிழந்த மாணவி அணிந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்ததால் கோபமடைந்த மாணவி, கடந்த 12ஆம் திகதி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.

படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான இவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8ஏ, பி சித்திபெற்றவர். இவர் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை