தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! – ஒரே நாளில் கடும் சரிவு: பவுணுக்கு ரூ. 20,000 குறைந்தது!
கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது, இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 22, 2025) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சுமார் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தங்க விலை நிலவரம்:
இன்றைய நிலவரத்தின்படி, கொழும்புச் சந்தையில் தங்கத்தின் விலை விபரங்கள் வருமாறு:
| விபரம் | விலை (ரூபாய்) |
| ஒரு அவுன்ஸ் தங்கம் (1 அவுன்ஸ்) | 1,248,237 |
| 24 கரட் 1 கிராம் தங்கம் | 44,040 |
| 24 கரட் ஒரு பவுண் (8 கிராம்) | 352,250 |
| 22 கரட் 1 கிராம் தங்கம் | 40,370 |
| 22 கரட் ஒரு பவுண் (8 கிராம்) | 323,000 |
| 21 கரட் 1 கிராம் தங்கம் | 38,540 |
| 21 கரட் ஒரு பவுண் (8 கிராம்) | 308,300 |
தொடர்ச்சியாக ஏறி வந்த நிலையில், விலையில் ஏற்பட்ட இந்தத் திடீர் வீழ்ச்சி வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.





