இலங்கையில் இன்றும் குறைவடைந்த தங்கத்தின் விலை!
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தங்கத்தின் விலையானது மூன்று இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் (ஒக்டோபர் 29, 2025) தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்:
இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது ரூபா 1,208,519 ஆகப் பதிவாகியுள்ளது.
| தங்கம் வகை | ஒரு கிராம் (ரூபா) | ஒரு பவுண் (ரூபா) |
| 24 கரட் | 318,000 (செட்டியார் தெரு) | |
| 22 கரட் | 42,630 | 312,650 |
| 21 கரட் | 37,310 | 298,450 |
- கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ரூபா 318,000 ஆகவும், 22 கரட் தங்கப் பவுண் ரூபா 294,000 ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 இலட்சத்தைக் கடந்திருந்த 24 கரட் தங்கப் பவுணின் விலை தற்போது படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





