ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: திருத்தப்பட்ட ஓய்வூதியம்
2025ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியங்கள் புதிதாக திருத்தப்பட்டு, இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தால், 500,000க்கும் அதிகமான ஓய்வுபெற்ற பொதுத்துறை ஊழியர்கள் நேரடி நன்மை பெற உள்ளனர்.
அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது, தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மின்னூட்டம், மற்றும் வீட்டு வாடகை போன்ற தேவைகளை எதிர்கொள்ள, இந்த ஊதிய திருத்தம் அவசியமானதாகும்.
மேலும், 2017 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், 2019 மே 31 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 04/2019-ன் அடிப்படையில் 2017 சம்பள அமைப்புக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.