செம்மணி புதைகுழியில் மர்ம வாகன கண்காணிப்பு – மக்கள் மத்தியில் அச்சம்!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடக்கும் இரண்டாவது கட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, நேற்று வரையிலான நிலவரப்படி மொத்தமாக 33 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜூன் 29 ஆம் திகதி புதைகுழி அருகே மர்ம வாகனம் ஒன்று கண்காணித்து சென்றதாக புகார்கள் எழுந்துள்ளன. ” Y U H – 5 0 4 9 7 ” என்ற இலக்கத்துடன் இருந்த வாகனம், அகழ்வு நடைபெறும் பகுதியில் உள்வாங்கப்படாமல் உள்ளே நுழைந்து நோட்டமிட்டது எனப் பதிவாகியுள்ளது.
கேள்விகள் எழும் நிலையில்…
அந்த வாகனத்தில் வந்தது யார்?
அதிகார அனுமதியின்றி அகழ்வு பகுதியை ஏன் பார்வையிடவேண்டும்?
காவல்துறைக்கு இந்த இலக்க வாகனங்கள் இல்லையென்பது உண்மைதான் என மக்கள் கூறுகின்றனர்.
மக்கள் மத்தியில் அச்சம்
பல தரப்பில் சித்திரவதை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தாய், சேய், சிறுவர்கள் உட்பட பலரின் எலும்புக்கூடுகள் இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு முக்கிய மனித உரிமை விசாரணையாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மர்ம வாகனத்தின் இயக்கம், மக்களிடம் அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும், சர்வதேச சமூகமும் இந்த அகழ்வுப் பணிகளை அக்கறையுடன் கவனித்து வருகின்றது.