Welcome to Jettamil

கனடா செல்ல உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

கனடா செல்ல உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

எனினும் கனடிய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் வீட்டுப்பிரச்சனைகள் காரணமாக குடியேறுவோரின் எண்ணிக்கையை மட்டுப்புடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆண்டு தோறும் அரசாங்கம் வீட்டுப் பிரச்சினை குறித்த சவால்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை