Welcome to Jettamil

நட்பு நாடுகளிடம் இருந்து நிதியுதவிக்கு நல்ல பதில்

Share

நிதி உதவிக்காக நட்பு நாடுகளின் தூதுவர்களிடமிருந்து ‘நல்ல பதில்’ கிடைத்துள்ள போதும், ஒப்பந்தங்களை இறுதி செய்ய மூன்று மாதங்கள் ஆகலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினமும், நேற்றும் பல நாடுகளின் தூதுவர்களுடன் பேசியதாகவும், பிரதமர் விக்ரமசிங்க காணொளி மூலம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் பதில்கள் நன்றாக உள்ளன. ஆனால் அவர்களிடம் நமது நிலைமையை சொல்லி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதை செய்து முடிக்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை திட்டமிடல் இல்லாமையால் ஏற்பட்டுள்ளது என்றும், நிதி உறுதிப்பாடின்மையால் ஏற்படவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டினார்.

“எரிபொருள் மற்றும் உரம் குறித்து இரண்டு நாட்களாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. நாங்கள் தயாராக இல்லை என்பதை இது காட்டுகிறது.

நாங்கள் பற்றாக்குறை மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அடுத்த சில வாரங்களில் நாம் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொள்வோம்.

இந்த பொருளாதார நெருக்கடியை நாம் ஒன்றாகச் சமாளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

அதன் பின்னர், எமது நடுத்தர மற்றும் நீண்டகால எதிர்காலம் சிறப்பாக அமையும். சர்வதேச நாணய நிதியத்துடனும் நாங்கள் பேசியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை