Welcome to Jettamil

யாழ்ப்பாணம் வர பயந்து நடுங்கும் கோட்டாபய ராஜபக்ஷ – யாழ். நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Share

யாழ்ப்பாணம் வர பயந்து நடுங்கும் கோட்டாபய ராஜபக்ஷ – யாழ். நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிக்க, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாயமான காரணங்களுடன் சத்தியக் கடதாசியாக மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மனித உரிமைகள் தினப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 2012ஆம் ஆண்டு உறவினர்களால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில், இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சிகள் விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி ஆரம்பமானது.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது, 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டபோதும், அவர் தொடர்ச்சியாகப் பாதுகாப்புக் காரணங்களால் யாழ்ப்பாணம் வர முடியாது எனத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை (டிசம்பர் 10, 2025) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை (Online) ஊடாகத் தோன்றிச் சாட்சியம் அளிக்கத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இதனையடுத்து, அவர் யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மன்று, அடுத்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை