4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! – இன்று இரவு 11 மணி வரை பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 11, 2025) நாட்டின் நான்கு மாவட்டங்களுக்குச் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்க வாய்ப்புள்ளது.
நான்கு மாவட்டங்களுடன் சேர்த்து மேலும் 08 மாவட்டங்களுக்கு மிதமான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.
சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொது மக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது:
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும். மழை மற்றும் இடியின்போது திறந்தவெளிகளில் நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





