Welcome to Jettamil

20வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது அமர்வின் வழிகாட்டும் கொள்கை

Share

20வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது அமர்வின் வழிகாட்டும் கொள்கை

20வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வின் வழிகாட்டும் கொள்கைகளை, இலங்கையில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் தூதர் குய் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வானது கொழும்பில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நேற்றையதினம் (28.10.2025) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் சீன ஊடகக் குழு (CMG) ஆசிய-பசிபிக் இணைந்து “புதுமை திறந்த தன்மை பகிரப்பட்ட மேம்பாடு” என்ற தலைப்பில் ஒரு உலகளாவிய உரையாடல் அமர்வை நடத்தியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வின் வழிகாட்டும் கொள்கைகளை தொடர்பாக தூதர் குய் ஜென்ஹாங் உரையாற்றினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வின் வழிகாட்டும் கொள்கைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதர் குய் ஜென்ஹாங் பகிர்ந்து கொண்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் விளம்பரத் துறையின் துணை அமைச்சரும் CMG இன் தலைவரும் தலைமை ஆசிரியருமான ஷென் ஹைக்சியோங், காணொளி இணைப்பு மூலம் அமர்வில் உரையாற்றினார்.

இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

CMG ஆசிய-பசிபிக் துணை இயக்குநர் திருமதி லியாவோ லி வரவேற்புரையாற்றினார். அரசியல், வணிகம், கல்வி மற்றும் ஊடக சமூகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை