வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை செயலாளர் பற்றிக் தனுஷ் தலைமையில் உணர்வுபூர்வமாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது தாயக விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிராக்கிய மாவீரர் பெற்றோர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக மாவீரர்களின் நினைவாக மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி மதிப்பளிக்கபட்டதோடு
தொடர்ச்சியாக முன்னாள் போராளி செழியனால் மாவீரர்களின் நினைவுரை முன்னெடுக்கப்பட்டது.
இறுதியாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிய போசனமும் பரிமாறபட்டது.
இதன்பொழுது மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள்,உரித்துடையோர் , இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராஜா,முன்னாள் போராளி செழியன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை மகளிர் அணி செயற்பாட்டாளர்கள் ,இளைஞர் அணியினர் ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.