Welcome to Jettamil

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அர்ச்சுனா இராமநாதன் அம்பலப்படுத்திய கருத்துகள்

Share

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அர்ச்சுனா இராமநாதன் அம்பலப்படுத்திய கருத்துகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தை அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:

எந்தப் பெற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள்.

நாங்கள் பின்பற்றுவது இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதங்களாகும். இவற்றில் இதற்கு இடமில்லை. யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம்.

நாட்டை வீணாக்க முடியாது. வெளிநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து LGBTQ படம் காட்ட முடியாது.

யாருடைய பிள்ளையும் நாசமாக நான் விடமாட்டேன். இந்த நாட்டை அமெரிக்காவாக மாற்ற வேண்டாம். அதை சட்டமாக்கி எதிர்கால சந்ததியை நாசமாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை