Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : பரிதாபகரமாக பலியான விவசாயி

Share

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : பரிதாபகரமாக பலியான விவசாயி

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களை ஏற்றிக் கொண்டிருந்த விவசாயி மீது பாரவூர்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது பாரவூர்தியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்ததாகவும் இதனால் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவியந்திரத்துடன் நிலை தடுமாறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் போது வீதியிலிருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.

சம்பவத்தில் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த (65) வயதுடைய சீனியர் இராஜன் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை