தென்னக்கோனுக்கு எதிரான சட்டத்தரணிகளின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் – செ.குமாரசிங்கம்
பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனுக்கு எதிரான சட்டத்தரணிகளின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செ.குமாரசிங்கம் தெரிவித்தார்.
நேற்றையதினம் சங்கானையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர் பதவியேற்று சில வாரங்களுக்குள்ளேயே இந்த போதையை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றார். இன்றுவரை 23 ஆயிரம் பேரை கைது செய்து வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் சிலர் முட்டுக் கட்டைகளும் அவருக்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றுதிரண்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இவர் கடமையின் நிமித்தம் ஒருவரை தாக்கி குற்றப்பணம் கட்டுவதாக குற்றச்சாட்டு முனாவைத்துள்ளார்கள். அந்த குற்றச்சாட்டினை வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனம் சார்பாக நான் மறுக்கிறேன்.
23 ஆயிரம் சட்டத்தரணிகள் அவருக்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்றால் அவர்களுடைய வருமானம் இழக்கப்பட்டுள்ளது. போதை வழக்குகளில் அவர்கள் சிக்கினால் சட்டத்தரணிகளை தான் அவர்கள் நாட வேண்டும். ஆகையால் அவர்களுடைய வருமானம் குறைந்து விட்டதாக தான் நான் நினைக்கிறேன். சட்டத்தரணிகளின் இந்த செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் மார்தட்டி தான் இந்த போதையை ஒழிப்பேன் என்று நான்கு வருடங்களாக கூறி வருகின்றார். ஆனால் தேசப்பந்து தென்னக்கோன் அவர்கள் வந்து இரண்டு மாதங்களும் ஆகவில்லை. ஆனால் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். ஆனால் அமைச்சரால் நான்கு வருடங்களாகவும் அதனை செய்ய முடியவில்லை என்றார்.