Welcome to Jettamil

மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைய உணவுப் பொருட்கள், உற்பத்தி சேவைகளின் விலைகள் அதிகரிப்பு

Share

மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைய, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சோறு, கொத்து, Fried Rice ஆகியவற்றின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஏனைய சிற்றுண்டி வகைகள், அப்பம், பால் தேநீர், Plain Tea உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்படவில்லை என அவர் கூறினார்.

இதனிடையே, மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக நேற்று முதல் தமது உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

Lunch sheet, உணவு பொதியிடும் கடதாசி ஆகியன 5 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், Shopping Bag
உள்ளிட்ட உற்பத்திகளை 15 முதல் 20 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்திற்கு ஏற்ப தகவல் தொடர்பாடல் சேவைகள், தொழில்துறை மற்றும் உற்பத்தி சேவைகளின் விலைகளை உயர்த்த நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் Photo பிரதி ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அடையாள அட்டையின் பிரதி 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாகவும், A- 4 பிரதியெடுத்தலுக்கான கட்டணம் 15 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை