Welcome to Jettamil

இலங்கைக்கு தொடர்ந்து இந்தியா உதவும் – ஜெய்சங்கர் உறுதி

Share

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மோசமடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், மீட்பதற்கும் இந்தியாவின் உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாகவே, இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடியதாக புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார  அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மிலிந்த மொறகொட விளக்கமளித்துள்ளார் என்றும் இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் கட்டணச் சமநிலை ஆதரவு போன்றவற்றில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளைத் தொடர்வதில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கும், இலங்கைத் தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட வழிமுறைகள் ஊடாக, இலங்கையின் பொருளாதாரத்தை மீள உறுதிப்படுத்தி, மீட்பதற்கான வழிகளை ஆராய்ந்து உதவுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்தும் தொடர்பில் இருக்குமாறும் அவர் இலங்கைத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரக உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை