Welcome to Jettamil

இந்திய நிதி அமைச்சர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம்!

Share

இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றையதினம் யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த சிறுவர் சிறுமியர்களுடன் கலந்துரையாடி அமைச்சர் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை