Welcome to Jettamil

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Share

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றையதினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை