Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு!

Share

இந்தியாவின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=6iQEU8EiCpU

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை