இந்தோனேசியாவின் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
இதனையடுத்து புதிய தலைநகருக்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளன.
ஜகார்த்தாவில் இருந்து தலைநகரை மாற்றும் பணிகளை வரும் 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் அந்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
புதிய தலைநகரம் நுசன்டாரா (Nusantara) என்றழைக்கப்படும்.
பஹாஸா இந்தோனேசிய மொழியில் அதற்குத் தீவுக்கூட்டம் என்று பொருள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியா பெருங்கடலால் இணைக்கப்பட்ட தீவுக்கூட்டம் எனும் புவியியல் நிலையைப் தலைநகரின் புதிய பெயர் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கட்டங்களாக இடம்பெறும் புதிய தலைநகர நிர்மாணப் பணிகள் 2045க்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.