கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில், கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் அமையவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விசேட ஆலய வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர் விருந்தினர்கள் விழா இடம்பெறும் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வும் இடம்பெற்று தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது.