யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஒன்றரை மாதங்களேயான சிசு மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைசேர்ந்த குறித்த சிசுவுக்கு நேற்றுமுன்தினம் மாலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி சிசு அன்றைய தினம் இரவே இறந்துள்ளது. இறப்பின் பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் சிசுவுக்க கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.