Welcome to Jettamil

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு,  தமிழ்த் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு

Share

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு,  தமிழ்த் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ‘நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழ்த் தாய்க்கு மட்டும் வணக்கம் செலுத்தி எழுதப்படவில்லை என்றும்,  

தமிழ்த்தாயுடன் பாரதத்தாய், திராவிடத்தாய் என மூவருக்கு வணக்கம் செலுத்தி எழுதப்பட்டுள்ள நிலையில், அதை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், அதற்குப் பதிலாக, தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் வகையில், புதுச்சேரி அரசு அறிவித்துள்ள பாவேந்தர் பாரதிதாசனின் பாடலான ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ பாடலை மாநில பாடலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் தனது வரம்பை மீறி, அதிகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்களும்,  நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை