சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! – வவுனியா நபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை
16 வயதுக்குட்பட்ட சிறுமியைத் தவறான முறைக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனையடுத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் இன்று பின்வரும் தீர்ப்பினை வழங்கினார்
குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை.
10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது (தவறின் 2 மாத கால சாதாரண சிறை).
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் (தவறின் 1 வருட சிறைத்தண்டனை).





