Welcome to Jettamil

மக்கள் அடைந்த அதிர்ச்சியை என்னால் உணர முடிகிறது” – விடுதலையான பின் டக்ளஸ் தேவானந்தா உருக்கம்!

Share

மக்கள் அடைந்த அதிர்ச்சியை என்னால் உணர முடிகிறது” – விடுதலையான பின் டக்ளஸ் தேவானந்தா உருக்கம்!

தனது திடீர் கைது நடவடிக்கையினால் மக்கள் அடைந்த அதிர்ச்சியையும் கவலையையும் தன்னால் உணர முடிவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கம்பஹா நீதிமன்றத்தினால் நேற்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளிச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்” எனத் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்குப் பல காரணங்களுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் மிக வலுவாக எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அவரது குழுவினருக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

வழக்கின் நியாயங்களை உணர்ந்து தனக்கு பிணை வழங்கிய கம்பஹா மாவட்ட நீதவானுக்கும் அவர் தனது நன்றியை உரித்தாக்கினார்.

இராணுவத்திற்குச் சொந்தமான துப்பாக்கி ஒன்று பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துர மதூஷிடம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கடந்த மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை