இலங்கை எதிர்கொண்டுள்ள, முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடி, மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாக மாறலாம் என ஐ.நா எச்சரித்துள்ளது.
இது முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக மாறலாம் என நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
இதற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு பணியகத்தின், பேச்சாளர் ஜென்ஸ் லார்கே நேற்று தெரிவித்துள்ளார்.
பெருமளவு மக்கள் தற்போது போதிய உணவு இல்லாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் குடும்பங்கள் மருத்துவ சேவைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர்கள் கல்வியை பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது எனவும், தெரிவித்துள்ளார்
அதேவேளை, உலக உணவுத் திட்டத்தின் தலைவருடன், நேற்று கலந்துரையாடி, அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
உலக உணவுத் திட்டத்தின் தலைவர் தனது அழைப்பை ஏற்று விரைவில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.