Welcome to Jettamil

தமிழ்நாட்டில் இணையத்தள சூதாட்ட தடை சட்டம் அமுல்

Share

தமிழ்நாட்டில் இணையத்தள சூதாட்ட தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையளத்தள உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை இழந்து பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இணையத்தள சூதாட்ட தடை சட்டமூலம் கடந்த மாதம் 23ஆம் திகதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கமைய, இணையத்தள சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையத்தள விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5 ஆயிரம் இந்திய ரூபா அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 இலட்சம் இந்திய ரூபா அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை