Welcome to Jettamil

ரஷ்யாவின் ஷிவேலுச் எரிமலை வெடித்துச் சிதறல்

Share

ரஷ்யாவின் கம்சாட்கா (Kamchatka)தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச்  (Shiveluch) எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.  

சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு அதன் சாம்பல் எழும்பி இருக்கிறது.

மேலும், 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் வீடுகளிலும் வாகனங்களிலும் சாம்பல் படர்ந்துள்ளது.   60 ஆண்டுகளில் இல்லாத அளவில் சாம்பல் படர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை