28000 பலி எண்ணிக்கையை நெருங்கிய இஸ்ரேல் போர்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்த பலரையும் சுட்டுக் கொன்றதோடு, அங்கிருந்து 200 இற்கும் மேற்பட்டவர்ககை பணயக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
அதனை தொடர்ந்து, இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து காசா மீது நடத்திவரும் தாக்குதல்கள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் பலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலிய படைகள் காவு வண்டிகள் மற்றும் தற்காப்பு குழுவினரை காசாவினுள் செல்வதை தடுப்பதனால் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா தான் இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.