Welcome to Jettamil

பல இலட்சம் அடியவர்கள் புடை சூழ வல்லிபுரத்து ஆழ்வாருக்கு சமுத்திரத் தீத்த உற்சவம்!

Share

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீத்த உற்சவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து கற்கோவளத்து அடியவர்கள் வல்லிபுரத்து ஆலள்வாரையும் பரிவார மூர்திகளையும் ஆஞ்சனேயர் முன்னே செல்ல, காவிச் சென்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்திலே சக்கரத்து ஆழ்வார் என்று சொல்லுகின்ற வல்லிபுரத்து ஆழவார் தீத்தமாடினான்.

கடந்த 14/09/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வல்லிபுரத்து ஆழ்வார் திருவிழாவின் 16ம் நாளான நேற்று புரட்டாதி பௌர்ணமியிலே தீத்த உற்சவம் இடம் பெறுவது வழமையாகும்.

வல்லிபுரத்து அழ்வார் சமுத்திர தீத்த உற்சவத்திற்க்கு வடமராட்சி, யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் அடியார்கள் சுமர் இரண்டு இலட்சம் வரையான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை