இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகவே கால அவகாசம் முடிவடைந்தவுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதுடன், விசா காலம் நீடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.