Welcome to Jettamil

வெளிநாடுகளில் இருந்து தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

Share

வெளிநாடுகளில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி அதிகளவு தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் உடனடியாக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று,  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளினால் ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழப்பதாக  அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான நடவடிக்கைகளால் சாதாரண பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகமாட்டார்கள் எனவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை