சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வானது சங்கானை கலாச்சார மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகி, பேரணியாக சங்கானை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் சங்கானையில் பிரமாண்டமான முறையில் விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.
சங்ஙானை பிரதேச செயலர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் திரு.ரவீந்திரன்,
உலக தரிசனம் நிறுவனத்தின் கள முகாமையாளர் பாக்கியநாதன் ரொஹாஸ், சங்கானை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வை.யதுனந்தன், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. பாலரூபன், வட்டுக்கோட்டை, மானிப்பாய், இளவாலை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி,
அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.